துர்கா ஸ்டாலினிடம் கேள்வி எழுப்பிய மூதாட்டி!

நெல்லை வானமாமலை பெருமாள் கோயிலில் சாமி தரிசனம் செய்த ஸ்டாலினின் மனைவி துர்காவிடம், மூதாட்டி ஒருவர், ஸ்டாலின் கோயிலுக்கு வருவாரா என கேள்வி எழுப்பினார்.

நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் உள்ள வானமாமலை பெருமாள் கோயிலில் திமுக தலைவர் ஸ்டாலினின் மனைவி துர்கா, சாமி தரிசனம் செய்தார். அப்போது, மூதாட்டி ஒருவர், துர்கா ஸ்டாலினை பார்த்து நீங்கள் யார் என வினா எழுப்பினார். உடனிருந்தவர்கள் மு.க.ஸ்டாலின் மனைவி என கூறினர். இதனை கேட்ட மூதாட்டி, ஸ்டாலின் கோயிலுக்கு வருவாரா?, பெருமாள் மீது நம்பிக்கை உள்ளதா? என துர்காவிடம் கேள்வி எழுப்பினார். இதனை சற்றும் எதிர்பார்க்காத துர்கா, தடுமாற்றத்துடன் உண்டு என கூறி விட்டு அங்கிருந்து புறப்பட்டார். இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

 

Exit mobile version