பசுமை வீடு திட்டத்தின் கீழ் முதியவரை ஏமாற்றிய ஒப்பந்ததாரர்: பணி பாதியில் நிற்பதால் முதியவர் அவதி !

களக்காடு யூனியன் சிங்கிகுளத்தை சேர்ந்த மாடசாமி என்பவர், பசுமை வீடு திட்டத்தின் கீழ் தனது வீட்டை கட்ட எற்பாடு செய்துள்ளார். அதனை தொடர்ந்து தனது வீட்டை கட்டுவதற்கு களக்காடு பி. டி.ஒவை தொடர்பு கொண்டு, தனக்கு வயதான காரணத்தால் தனக்கு வரும் பணத்தை ஒரு ஒப்பந்ததாரரை வைத்து வீட்டை கட்டி தர கோரியுள்ளனர். அதனை தொடர்ந்து வீடு கட்டுமானப் பணிகள் நடைபெற தொடங்கிய நிலையில் சில வருடங்களாக கட்டுமான ஒப்பந்ததாரர் வீட்டை கட்டாமல் பாதியிலேயே நிறுத்திவிட்டதாகவும், பின்னர் மீண்டும் ஒப்பந்ததாரர் வரவில்லை என்றும் மாடசாமி கூறினார். செய்வதறியாமல் திக்கற்று நின்ற முதியவர், ஆட்சியரிடத்தில் நடவடிக்கை எடுக்க கோரி மனு அளித்துள்ளார்.

YouTube video player

Exit mobile version