கள்ளழகர் கோயிலுக்கு வீட்டை தானமாக வழங்கிய முதியவர்

உலகப் புகழ் பெற்ற மதுரை கள்ளழகர் கோயிலுக்கு ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான வீட்டை தானமாக வழங்கிய முதியவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

மதுரை மாவட்டம் நாகமலை புதுக்கோட்டையை சேர்ந்த கருப்பையா மின்சார துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றார். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு கருப்பையாவின் மனைவி இறந்த பிறகு, இரண்டு பெண் பிள்ளைகள் கருப்பையாவை கவனித்து வருகின்றனர். இந்த நிலையில், ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான இரண்டு மாடி வீட்டை, குல தெய்வமான கள்ளழகர் பெருமானுக்கு முதியவர் கருப்பையா தானமாக வழங்கியுள்ளார். தனது மகள்களுடன்  மதுரை கள்ளழகர் கோயிலுக்கு சென்ற முதியவர் கருப்பையா, ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள வீட்டின் பத்திரத்தை, கோயில் துண ஆணையர் அனிதாவிடம் வழங்கினர்.

Exit mobile version