மும்பையில் பழைய 4 மாடி கட்டடம் இடிந்து விழுந்த கோர விபத்தில் 14 பேர் உயிரிழந்துள்ளனர். 9 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
டோங்கிரி பகுதியில் உள்ள பழமை வாய்ந்த 4 மாடி கட்டடம் இடிந்து விபத்துக்குள்ளானது. இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த மீட்பு படையினர், மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த கோர விபத்தில் 40க்கும் மேற்பட்டோர் சிக்கியுள்ளதாக பேரிடர் மீட்பு குழுவினர் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில் 14 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. 9 பேர் பலத்தை காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இடிபாடுகளில் பலர் சிக்கி இருப்பதால், உயிரிழப்பு அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது. மோப்ப நாய்களின் உதவியுடன் இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை தேடும் பணி தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.