சென்னை எண்ணூர் துறைமுகத்தில் கப்பலில் ஏற்பட்ட திடீர் உடைப்பால், அதிலிருந்து கச்சா எண்ணெய் வெளியேறி கடலில் கலந்தது.
சென்னை எண்ணூர் காமராஜர் துறைமுகத்தில், கோரல் ஸ்டார்ஸ் என்ற கப்பலில் இருந்து, குழாய் மூலமாக கச்சா எண்ணெய் இறக்கும் பணி நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது, குழாயில் திடீரென உடைப்பு ஏற்பட்டதால், அதிலிருந்தது சுமார் 250 டன் கச்சா எண்ணெய் கடலில் கலந்தது.
தகவலறிந்து வந்த தீயணைப்புத்துறை மற்றும் கடலோர காவல் படையினர், கடலில் படிந்த எண்ணெயை அகற்றும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். கடலில் கொட்டிய கச்சா எண்ணெய் குறித்த பாதிப்புகளை கண்டறிவதற்காக விசாகப்பட்டினத்தில் இருந்து ஒரு கப்பலும், கடலோர பாதுகாப்பு படைக்கு சொந்தமான மற்றொரு கப்பலும் விரைந்துள்ளது.