தமிழகத்தின் மறு வாக்குப்பதிவு வாக்குச்சாவடிகளின் விவரம்

தமிழகத்தில் எந்தெந்த வாக்குச்சாவடிகளில் மறு வாக்குப்பதிவு நடைபெறுகிறது என்பது குறித்து தற்போது பார்க்கலாம்.

பாப்பிரெட்டிப்பட்டியில் உள்ள வாக்குச்சாவடி எண் 181, 182 அய்யம்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி, நத்தமேடு அரசு மேல்நிலைப்பள்ளியில் உள்ள 192, 193, 194, 195 ஆகிய வாக்குச்சாவடிகளிலும், ஜல்லிபுதூர் பஞ்சாயத்து யூனியன் ஆரம்பப் பள்ளி – எண் 196, 197 ஆகிய வாக்குச்சாவடிகளிலும் இன்று மறுவாக்குப்பதிவு நடைபெறுகிறது.

பண்ருட்டி வாக்குச்சாவடி எண் 210 திருவதிகை நகராட்சி உயர்நிலைப்பள்ளியிலும்

காங்கேயம் வாக்குச்சாவடி எண் 248 அரசு நடுநிலைப்பள்ளியிலும் மறுவாக்குப்பதிவு நடைபெறுகிறது.

இதேபோல் ஆண்டிப்பட்டி, பாலசமுத்திரம் வாக்குச்சாவடி எண் 67 அரசுப்பள்ளி, பெரியகுளம் வடுகப்பட்டி வாக்குச்சாவடி எண் 197 சங்கரநாராயணன் நடுநிலைப் பள்ளி ஆகிய வாக்குச்சாவடிகளிலும்

பூந்தமல்லி வாக்குச்சாவடி எண் 195 மேட்டுப்பாளையம் பஞ்சாயத்து யூனியன் ஆரம்பப்பள்ளி வாக்குச்சாவடியிலும் இன்று மறுவாக்குப்பதிவு நடைபெறுகின்றன.

Exit mobile version