சென்னையில் கொரோனாவால் பாதித்தோர் எண்ணிக்கை 5 ஆயிரத்து 946 ஆக அதிகரித்துள்ளது!

அதிகபட்சமாக ராயபுரம் மண்டலத்தில், கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஆயிரத்து 47 ஆக உயர்ந்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக, கோடம்பாக்கத்தில், 919 பேரும், திரு.வி.க. நகரில் 737 பேரும், தேனாம்பேட்டையில் 640 பேரும், அண்ணாநகரில் 493 பேரும், கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். வளசரவாக்கத்தில் 483 பேரும், தண்டையார்பேட்டையில் 474 பேரும், அடையாறில் 316 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அம்பத்தூரில் 285 பேருக்கும், திருவொற்றியூரில் 133 பேருக்கும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

Exit mobile version