சென்னையில் கொரோனாவால் பாதித்தோர் எண்ணிக்கை 3 ஆயிரத்து 839 ஆக அதிகரித்து உள்ளது…

சென்னையில் கொரோனாவால் பாதித்தோர் எண்ணிக்கை 3 ஆயிரத்து 839 ஆக அதிகரித்துள்ள நிலையில், மண்டல வாரியாக பாதிப்பு நிலவரங்கள், அதிகபட்சமாக ராயபுரம் மண்டலத்தில், கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 676ஆக உயர்ந்தள்ளது. இதற்கு அடுத்தபடியாக, கோடம்பாக்கத்தில், 630 பேரும், திரு.வி.க. நகரில் 556 பேரும், தேனாம்பேட்டையில் 412 பேரும், வளசரவாக்கத்தில் 319 பேரும் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். அண்ணாநகரில் 301 பேரும், தண்டையார்பேட்டையில் 274 பேரும், அம்பத்தூரில் 205 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அடையாறில் 175 பேருக்கும், திருவொற்றியூரில் 84 பேருக்கும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

 

Exit mobile version