ராமநாதபுரம் வலசை வந்த வெளிநாட்டு பறவைகள் எண்ணிக்கை குறைவு

ராமநாதபுரத்திற்கு வலசை வருகின்றன. சித்திரங்குடி பறவைகள் சரணாலயம், தேர்தங்கல் சரணாலயம், செல்வனூர் சரணாலயம் உள்ளிட்ட இடங்களில் தங்கியிருந்து இந்தப் பறவைகள் இனப்பெருக்கம் செய்கின்றன. இந்த ஆண்டு பிளமிங்கோ, நத்தைகொத்தி நாரை, வெள்ளை அரிவாள் மூக்கன், கூழைக்கடா உள்ளிட்ட பறவைகள் ராமநாதபுரத்திற்கு வந்துள்ளன.

இந்நிலையில், ராமநாதபுரம் முதல் தூத்துக்குடி வரை மூன்று குழுக்களாக பிரிந்து பறவைகளை கணக்கெடுக்கும் பணியில் வனத்துறையினர், மாணவர்கள், தன்னார்வலர்கள் ஈடுபட்டுள்ளனர். 2வது நாளாக இன்றும் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது. வெளிநாட்டு பறவைகளை காண்பது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்த மாணவர்கள், வனத்துறையினருக்கு நன்றி தெரிவித்துக் கொண்டனர்.

இதனிடையே, ஈரோடு மாவட்டம் வெள்ளோடு பறவைகள் சரணாலயத்தில் வலசை வந்துள்ள பறவைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. கடந்த இரு ஆண்டுகளாக தண்ணீர் வரத்து இல்லாததால் குட்டையாக காணப்பட்ட வெள்ளோடு பறவைகள் சரணாலயத்தில், தற்பொழுது தண்ணீர் நிரம்பி காணப்படுகிறது. இதனால் சிறிய நீர்காகம், நாமக்கோழி, புலிமூக்கு வாத்து உள்ளிட்ட 50 வகைகளை சேர்ந்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பறவைகள் இங்கு வந்துள்ளன.

இந்நிலையில், சரணாலயத்தில் பறவைகள் அதிகளவில் வந்து தங்குவதற்கு வசதியாக நீர்நிலை செடிகளை அதிகம் வளர்க்க வேண்டும் எனவும் கரைப்பகுதிகளை பலப்படுத்த வேண்டும் எனவும் பறவை ஆர்வலர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Exit mobile version