இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை பத்தாயிரத்து 815 ஆக அதிகரித்துள்ளது.

இந்தியாவில், 24 மணி நேரத்தில் ஆயிரத்து 463 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ள நிலையில், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை பத்தாயிரத்து 815 ஆக அதிகரித்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 18 பேர் பலியான நிலையில், 350 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது. இதனால் அங்கு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை இரண்டாயிரத்து 684ஆக அதிகரித்துள்ளது. தலைநகர் டெல்லியில் புதிதாக 51 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதால், பாதிப்பு எண்ணிக்கை ஆயிரத்து 561ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் மேலும் 31 பேர் பாதிக்கப்பட்டுள்ளதால், கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஆயிரத்து 204 ஆக அதிகரித்துள்ளது. ராஜஸ்தானில் ஆயிரத்து 5 பேரும், உத்தரபிரதேசத்தில் 660 பேரும், குஜராத்தில் 650 பேரும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகாவில் இதுவரை 10 பேர் பலியாகி உள்ள நிலையில், 260 பேருக்கு நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. கேரளாவில் நேற்று 8 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டதால், அங்கு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 173 ஆக உயர்ந்துள்ளது.

Exit mobile version