கடந்த 10 ஆண்டுகளில் விலங்குகளின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது: முதுமலை புலிகள் காப்பக இயக்குனர்

கடந்த 10 ஆண்டுகளில் புலி உட்பட அனைத்து விலங்குகளின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளதாக, முதுமலை புலிகள் காப்பக கள இயக்குனர் தெரிவித்துள்ளார்.

நீலகிரி மாவட்டத்தில், சுமார் 320 சதுர கிலோ மீட்டர் பரப்பளவிலுள்ள முதுமலை புலிகள் காப்பகத்தில், நூற்றுக்கணக்கான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இந்தியாவிலேயே வன விலங்குகளுக்கு தேவையான தட்பவெப்ப நிலை கொண்ட ஒரே வனப்பகுதி இது என்பதால், அதிகளவு வனவிலங்குகள் வசித்து வருகின்றன. தற்போது பெய்து வரும் தொடர் மழை காரணமாக, இதமான காலநிலை நிலவுவதால், காப்பகம் முழுவதும் பசுமையாக காணப்படுகிறது. மேலும் வன விலங்குகளுக்கு தேவையான தண்ணீர், உணவு கிடைப்பதால், விலங்குகள் ஆரோக்கியத்துடன் காணப்படுவதாகவும், குறிப்பாக கடந்த 10 ஆண்டுகளில், யானை, புலி போன்ற வனவிலங்குகள் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளதாகவும், வனவிலங்குகள் வேட்டையாடப்படுவது முற்றிலுமாக தடுக்கப்பட்டு உள்ளதாகவும முதுமலை புலிகள் காப்பக கள இயக்குனர் தெரிவித்துள்ளார்.

Exit mobile version