ஈரோடு அருகே குழந்தையை கடத்த முயற்சித்ததாக வடமாநில இளைஞரை பொதுமக்கள் தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஈரோடு அருகே செங்கோடம் பாளையத்தில் வடமாநில வாலிபர் ஒருவர் அந்த பகுதியில் மாவு அரைக்க வந்த குழந்தையை தன் குழந்தை என்று கூறி அழைத்து செல்ல முயற்சித்துள்ளார். அந்த குழந்தை கூச்சலிட்டதை கண்ட பொதுமக்கள், கடத்த முயற்சித்ததாக நினைத்து தாக்கியுள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் வாலிபரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்