மக்களவை தேர்தலில் முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் 91 தொகுதிகளில் வேட்பு மனு தாக்கல் நாளை தொடங்குகிறது.
17வது மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. ஏப்ரல் 11ம் தேதி தொடங்கும் மக்களவை தேர்தல் மே 19ம் தேதி நிறைவு பெறுகிறது. முதற்கட்டமாக ஏப்ரல் 11ம் தேதி 20 மாநிலங்களில் உள்ள 91 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஆந்திராவில் 25 தொகுதிகள், அருணாசல் பிரதேசத்தில் 2 தொகுதிகள், அசாமில் 5, பீகாரில் 4, காஷ்மீரில் 1 என்று 91 தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் நாளை தொடங்குகிறது. வேட்பு மனு தாக்கல் செய்ய மார்ச் 25ம் தேதி கடைசி நாளாகும். 26ம் தேதி வேட்பு மனுக்கள் பரிசீலிக்கப்படும். மனுக்களை திரும்ப பெற 28ம் தேதி இறுதிநாள். அன்று மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். ஏப்ரல் 11ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று, மே 23ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும். மக்களவை தேர்தலுடன் ஆந்திர சட்டசபைக்கும் தேர்தல் நடத்தப்படுகிறது. வேட்பு மனு தாக்கல் தொடங்குவதால் 20 மாநிலங்களுக்கும் துணை ராணுவப்படையினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.