சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் நாளை தொடக்கம்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மக்களவை, சட்டமன்ற இடைத் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் நாளை தொடங்குகிறது. நாடு முழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படுகிறது. முதற்கட்டமாக 91 தொகுதிகளில் நடைபெறும் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்குகிறது. இரண்டாம் கட்டமாக தமிழகம், புதுச்சேரி உட்பட 13 மாநிலங்களில் உள்ள 97 தொகுதிகளில் ஏப்ரல் 18ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் நாளை தொடங்குகிறது.

வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய 26ம் தேதி கடைசி நாள் ஆகும். மார்ச் 27ம் தேதி வேட்பு மனுக்கள் மீது பரிசீலனை நடைபெறும். மனுக்களை திரும்ப பெற 28ம் தேதி கடைசி நாள். அன்று மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். ஏப்ரல் 18ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும். நாடு முழுவதும் 7 கட்ட தேர்தல் நிறைவு பெற்றவுடன் மே 23ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு, அன்றைய தினமே முடிவுகள் வெளியாகும்.

தமிழகத்தில் காலியாக உள்ள திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஓட்டப்பிடாரம் ஆகிய 3 தொகுதிகளை தவிர்த்து, மீதமுள்ள 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் மக்களவை தேர்தலுடன் சேர்த்து நடத்தப்படுகிறது. இதற்கான வேட்பு மனு தாக்கலும் நாளை தொடங்குகிறது. வேட்புமனு தாக்கல் நாளை தொடங்க உள்ளதால், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.

Exit mobile version