திருவாரூர் தொகுதியில் இடைத்தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் இன்று முதல் பெறப்படுகிறது. திருவாரூர் சட்டமன்றத் தொகுதிக்கு ஜனவரி 28ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இன்று முதல் வேட்பு மனு தாக்கல் தொடங்குகிறது.
10 ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் ஆகும். இதனிடையே, திருவாரூர் தொகுதி முழுவதும் தேர்தல் விதிமுறை நடைமுறைகள் அமலில் உள்ளன. காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில், தொகுதி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.