வண்ணம் பூசும் தொழிலாளர்கள் பயனடையும் வகையில் நிப்பான் நிறுவனம் சார்பில் அமுதசுரபி என்ற திட்டத்தை அந்நிறுவனத்தின் தலைவர் மகேஷ் எஸ். ஆனந்த் தொடங்கி வைத்தார்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் நிப்பான் நிறுவனத்தின் சார்பில் வண்ணம் பூசும் தொழிலாளர்களுக்கான அமுத சுரபி திட்டம் தொடங்கப்பட்டது. அதன்படி, கடைகளில் நிப்பான் பெயிண்ட் வாங்கும் போது வண்ணம் பூசும் தொழிலாளர்களுக்கு ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ள அமுதசுரபி அட்டைக்குப் பணம் வரவு வைக்கப்படும் என்றும், 20 லிட்டர் முதல் பெயிண்ட் வாங்கினால் 150 ரூபாய் முதல் 500 ரூபாய் வரையிலான பணம் அட்டையில் செலுத்தப்படும். இந்தத் தொகையை வைத்துக்கொண்டு, கார்ட் உடன் இணைக்கப்பட்ட சொடெக்ஸோ அட்டையை மளிகைக் கடைகள் மற்றும் உணவகங்களில் பயன்படுத்த முடியும், என்று கூறப்பட்டுள்ளது. இத்திட்டத்தை நிப்பான் பெயிண்ட் நிறுவனத்தின் தலைவர் மகேஷ்.எஸ்.ஆனந்த் தொடக்கி வைத்தார். இதில், அந்நிறுவன அதிகாரிகள் ஊழியர்கள் உள்படப் பலர் கலந்து கொண்டனர்.