தமிழகத்தின் 5 மாவட்டங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை

தமிழகத்தின் 5 மாவட்டங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

கடந்த சில தினங்களாகவே தமிழகம் மற்றும் கேரளாவில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனையில் பலரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், இந்த சோதனைகளின் அடிப்படையில் சில தினங்களுக்கு முன் டெல்லியில் 14 பேரையும், தமிழகத்தில் 2 பேரையும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைது செய்தனர். இவர்கள், அன்சருல்லா பயங்கரவாத அமைப்புக்கு நிதி திரட்டியதாக கூறப்படுகிறது. இவர்கள் பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இந்நிலையில், கைது செய்யப்பட்டவர்களின் வீடுகளில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். நெல்லையில் சோதனை நிறைவு பெற்ற நிலையில் சென்னை, மதுரை, ராமநாதபுரம், தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் சோதனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது

Exit mobile version