தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ஜகமே தந்திரம் படத்தின் அடுத்த அப்டேட்!

தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ஜகமே தந்திரம் படத்தின் மூன்றாவது பாடல், மே 22ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், தனுஷ், ஐஸ்வர்யா லட்சுமி நடித்துள்ள ஜகமே தந்திரம் படத்தை Y Not Studios தயாரித்துள்ளது.

ஜூன் 18ம் தேதி நேரடியாக நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ள இந்தப் படத்தின் ‘ரகிட ரகிட’ பாடலும், ‘லவ் யூ புஜ்ஜி’ பாடலும் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன.

இந்நிலையில், ஜகமே தந்திரம் படத்தில் இடம்பெற்றுள்ள மூன்றாவது பாடலான ‘நேத்து’, மே 22ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version