“எம் மினுக்கி காத்திருக்கா….” – ரசிகர்களின் வரவேற்பை பெற்ற அசுரனின் அடுத்த பாடல்

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், மஞ்சுவாரியார், அம்மு அபிராமி நடித்துள்ள திரைப்படம் “அசுரன்”. கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார்.

அக்டோபர் 4ம் தேதி படம் வெளியாகவுள்ள நிலையில் அசுரன் படத்தில் இருந்து “என் மினுக்கி” பாடலின் Lyric வீடியோ வெளியாகியுள்ளது. ஏக்நாத் எழுதிய இந்த பாடலை டிஜே, சின்மயி ஆகியோர் பாடியுள்ளனர். நெல்லை தமிழை கலந்து எழுதப்பட்டுள்ள பாடலின் வரிகள் ரசிகர்களை அதிகம் கவர்ந்துள்ளது. ட்விட்டரில் சென்னை ட்ரெண்டிங்கில் 2ம் பிடித்துள்ளது.

ஏற்கனவே படத்தில் “கத்திரி பூவழகி”, “பொல்லாத பூமி” ஆகிய பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version