சித் ஸ்ரீராமை தொடர்ந்து இசையமைப்பாளராகும் அடுத்த பாடகர்

தமிழ் சினிமாவில் சமீபகாலமாக வெவ்வேறு துறையை சார்ந்தவர்கள் இசையமைப்பாளர்களாக களம் இறங்கி வருகிறார்கள்.

நடிகரும் ,இயக்குநருமான எஸ்.ஜே.சூர்யா சில ஆண்டுகளுக்கு முன் தான் இயக்கி நடித்த “இசை” படத்திற்கு இசையமைத்திருந்தார். அவரை தொடர்ந்து நடிகர் அம்ரேஷ் கணேஷ் இசையமைப்பாளராக களமிறங்கி வெற்றி பெற்றார். சமீபத்தில் பிரபல பாடகரான சித் ஸ்ரீராம், இயக்குநர் மணிரத்னம் தயாரிக்கும் “வானம் கொட்டட்டும்” படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகியுள்ளார்.

இந்நிலையில் இந்த வரிசையில் பாடகர் அந்தோணி தாசனும் இணைந்துள்ளார். இயக்குநர் பொன்ராம் இயக்கத்தில் சசிகுமார் நடிக்கும் “எம்.ஜி.ஆர் மகன்” படத்தில் தான் அவர் இசையமைக்க உள்ளார்.

ஊர் திருவிழாவில் கச்சேரி நடத்திக்கொண்டிருந்த அந்தோணி தாசன் 2007ம் ஆண்டு “திண்டுக்கல் சாரதி” படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அதன் பிறகு சூதுகவ்வும், மேயாத மான், தானா சேர்ந்த கூட்டம், பேட்ட ஆகிய படங்களில் பாடியதன் மூலம் தமிழின் முன்னணி பாடகராக மாறினார். இந்த படத்தில் சசிகுமார் ஜோடியாக டப்ஸ்மாஷ் புகழ் மிருணாளினி நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version