பிரபல சமூக வலைத்தளமான Whatsapp மீண்டும் ஹேக் செய்யப்பட வாய்ப்புள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
சமூக வலைத்தளங்களில் அதிக பயனாளர்களால் உபயோகிக்கப்படும் செயலி Whatsapp. தினமும் உலகம் முழுவதும் 140 கோடிக்கும் மேலாக உபயோகிக்கும் Whatsapp-ற்கு ஆபத்து நேர்ந்துள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த ஆபத்து Whatsapp குரூப்களை தாக்கக்கூடியது என்றும், இதனால் பயனாளர்கள் மிகுந்த பாதிப்படைவார்கள் என்றும் எச்சரித்துள்ளனர்.
‘செக் பாய்ண்ட்’ என்னும் இணைய பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனம் Whatsapp குறித்த ஆய்வுகளில் ஈடுபட்டு வந்தது. இந்த ஆய்வின் முடிவில் Whatsapp குரூப்களில் ஹேக்கர்களால் அனுப்பப்படும் செய்தியால் நம் பயன்படுத்தும் அனைத்து மெசேஜ்களும் அழியும் என தெரிய வந்துள்ளது. மேலும் இதனை தடுப்பது குறித்தும் அந்நிறுவனம் ஆலோசனை வழங்கியுள்ளது.
இப்படியான நிகழ்வு உங்கள் மொபைல்களில் நிகழ்ந்துவிட்டால் பயனாளர்கள் தங்கள் Whatsapp கணக்கை உடனடியாக நீக்கி மீண்டும் பிளே ஸ்டோர்களில் பதிவிறக்கம் செய்ய வேண்டும் என வேண்டும் என கூறியுள்ளது. இதில் இருந்து தற்சமயம் உங்களை காத்துக்கொள்ள Whatsapp-ஐ அப்டேட் செய்ய வேண்டும் எனவும் ,இதற்காக Whatsapp புதிதாக 2.19.58 என்ற வெர்ஷனை வெளியிடப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது.