இந்தியா மிகப் பெரிய ஜனநாயக நாடு, வர்த்தகம் நிறைந்த நாடு. நாட்டின் அதிகப்படியான மக்களின் வாழ்வாதாரம் பயணத்தை அடிப்படையாக கொண்டு இருக்கிறது. இதை கருத்தில் கொண்டு, இந்திய ரயில்வே ரயில் போக்குவரத்தில் அடுத்த கட்டத்தை எட்டியுள்ளது. அதுதான் ‘ரயில்-18’. ரயில்-18, இந்தியாவின் முதல் என்ஜின் இல்லாத ரயில். மணிக்கு 180 கி.மீ. வேகத்தில் செல்லும் இந்த ரயில் இந்தியாவின் அதிவேக ரயில் என்ற பெருமையை பெற்றுள்ளது.
முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இந்த ‘ரயில்-18’ சென்னையில் தான் 18 மாதங்களாக தயாரிக்கப்பட்டது. அதனால் இதற்கு ‘ரயில்-18’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. 16 கோச்களை கொண்ட இந்த ரயிலில் ஒவ்வொரு கோச்சிலும் 56 அதிநவீன இருக்கைகள் உள்ளன. ரயில் செல்லும் திசைக்கு ஏற்ப இருக்கைகள் சுழலும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
தானியங்கு கதவுகளை கொண்ட இந்த ரயிலில், பயணிகளின் பாதுகாப்பிற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. ரயிலின் வேகம் 0 கி.மீ ஆக இருக்கும் போது தான், தானியங்கு கதவுகள் திறக்கப்படும். மேலும், ரயிலின் தானியங்கு கதவிலிருந்து பிளாட்பார்மிற்கு Sliding Steps அமைக்கப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் தவறி விழுவது தடுக்கப்படும்.
அதே போல் எல்லா கோச்சுகளின் கதவுகள் மூடிய பிறகே, ரயில் இயக்கப்படும். Advance Braking System மூலம் இந்த ரயிலின் வேகத்தை எளிதாக கட்டுப்படுத்த முடியும். ரயில் ஓட்டுனர்கள் ரயிலின் இரு புறத்தையும் கண்காணிக்க இருபுறங்களிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. பயணிகள் அவசர காலத்தின் போது, ரயில் குழுவுடன் தொடர்பு கொள்ள Emergency Talk Back Units பொருத்தப்பட்டுள்ளது.
மிகுந்த குறைவான எடை கொண்ட இந்த ‘ரயில்-18’, சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலின் வேகத்தை போல் 15% அதிவேகம் உடையது. இந்திய ரயில்வேயின் அடுத்தகட்ட புரட்சியாக 2020ஆம் ஆண்டு ‘ரயில்-20’-யும், 2050ஆம் ஆண்டு 105 புல்லட் ரயிலும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.