வடதமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு இயல்பைவிட வெப்பநிலை அதிகரித்து அனல் காற்று வீசக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார். மேற்கு மற்றும் வடமேற்கு திசையிலிருந்து தரைக்காற்று வட தமிழகத்தை நோக்கி வீசுவதால் வேலூர், திருத்தணி, கடலூர் உள்ளிட்ட வட தமிழக பகுதிகளில் இயல்பைவிட வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து காணப்படும் எனத் தெரிவித்துள்ளார். மேலும், வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து காணப்படுவதால் அனல் காற்று வீசக்கூடும். மேலும் அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கோடை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக பாலசந்தர் கூறியுள்ளார். தென்கிழக்கு அரபிக்கடல், குமரிக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் பலத்த காற்று வீசுவதால் அடுத்த இரண்டு நாட்களுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல
வேண்டாம் எனவும் எச்சரித்துள்ளார்.