மறுசீரமைத்து புதிதாக உருவாக்கப்பட்ட தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியங்கள்

மறுசீரமைத்து புதிதாக உருவாக்கப்பட்ட தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் துவக்கி வைத்தார். தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையமான ஆவின் கீழ் இயங்கும் கூட்டுறவு ஒன்றியங்களை மறு சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தன.

இந்நிலையில், மறுசீரமைத்து புதிதாக உருவாக்கப்பட்ட திருப்பூர் மற்றும் நாமக்கல் மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.

இதன் மூலம் திருப்பூர் மாவட்டத்தில் 84 ஆயிரத்து 566 உறுப்பினர்கள் மூலமாகவும், நாமக்கல் மாவட்டத்தில் ஒரு லட்சத்து 8 ஆயிரத்து 300 உறுப்பினர்கள் மூலம் நாளொன்றுக்கு 3 லட்சத்து 94 ஆயிரம் லிட்டர் பால் கொள்முதல் செய்ய முடியும் என்று தமிழக அரசின் செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் துறை சார்ந்த அமைச்சர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் பங்கேற்றனர்.

Exit mobile version