தமிழ்நாடு அரசு உத்தரவின்படி, இன்று முதல் புதிய கட்டுப்பாடுகள் அமல்

கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தமிழ்நாடு அரசு உத்தரவின்படி, இன்று முதல் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன.

இன்று முதல் அமலுக்கு வந்துள்ள புதிய கட்டுப்பாடுகளின்படி, அனைத்து அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் 50 சதவிகித பணியாளர்களுடன் மட்டும் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

பயணிகள் ரயில், மெட்ரோ ரயில், தனியார் மற்றும் அரசு பேருந்துகளின் இருக்கைகளில் 50 சதவிகித பயணிகள் மட்டுமே அமர்ந்து செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

வணிக வளாகங்களில் இயங்கும் பலசரக்கு மற்றும் காய்கறி கடைகளும் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதே சமயம், தனியாக செயல்படும் மளிகை, பலசரக்கு, காய்கறி மற்றும் இறைச்சி கடைகள், நண்பகல்12 மணி வரை மட்டும் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது.

சிறிய கடைகளில் ஒரே சமயத்தில் 50 சதவிகித வாடிக்கையாளர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மருந்தகங்கள், பால் விநியோகம் போன்ற அத்தியாவசிய பணிகள் வழக்கம் போல் தடையின்றி செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது.

 

6ம் தேதி முதல் புதிய கட்டுப்பாடுகள் அமல்

1. அனைத்து அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் 50% பணியாளர்களுடன் மட்டுமே இயங்க அனுமதி

2. பயணியர் ரயில், மெட்ரோ ரயில், தனியார் மற்றும் அரசு பேருந்துகளின் இருக்கைகளில் 50% பயணிகளுக்கு மட்டும் அனுமதி

3. வணிக வளாகங்களில் இயங்கும் பலசரக்கு மற்றும் காய்கறி கடைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது

4. தனியாக செயல்படும் மளிகை, பலசரக்கு மற்றும் காய்கறி விற்பனை கடைகள் நண்பகல் 12 மணி வரை மட்டும் செயல்பட அனுமதி

5. கடைகளில் ஒரே சமயத்தில் 50% வாடிக்கையாளர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும்

6. மருந்தகங்கள், பால் விநியோகம் போன்ற அத்தியாவசிய பணிகள் வழக்கம் போல் செயல்பட அனுமதி

7. தேநீர் கடைகள் நண்பகல் 12 மணி வரை மட்டுமே செயல்பட உத்தரவிடப்பட்டுள்ளது

Exit mobile version