புதிய கட்டுப்பாட்டால் நண்பகல் 12 மணிக்கே "தூங்கிய தூங்கா நகரம்"

கொரோனா தடுப்பு புதிய கட்டுப்பாடுகள் காரணமாக கடை வீதிகள் வெறிச்சோடி காணப்பட்டன. தூங்கா நகர் என பெயர் பெற்ற மதுரையில் நேற்று நண்பகல் 12 மணிக்கு மேல் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. இதனால், மூவாயிரத்திற்கும் மேற்பட்ட மளிகை மற்றும் நாட்டு மருந்து கடைகள் இயங்கி வரக்கூடிய கீழ ரத வீதி, அம்மன் சன்னதி வெறிச்சோடி காணப்பட்டன. இதேபோல், ஜவுளிக் கடைகள் நிறைந்த விளக்குத்தூண், நேதாஜி சாலை ஆகிய பகுதிகளும் வெறிச்சோடி காணப்பட்டன.

Exit mobile version