ஆகஸ்ட் மாதம் முதல் புதிய எம்.பி.பி.எஸ். பாடத்திட்டம்

22 ஆண்டுகளுக்கு பிறகு, மறு ஆய்வு செய்யப்பட்ட புதிய எம்.பி.பி.எஸ். பாடத்திட்டம் ஆகஸ்ட் மாதம் முதல் நடைமுறைக்கு வருகிறது.

மெடிக்கல் கவுன்சில் ஆப் இந்தியா அமைப்பு, இளங்கலை மருத்துவ படிப்பான எம்.பி.பி.எஸ். பாடத்திட்டத்தை தயாரித்துள்ளது. பாடத்திட்டம் இறுதி கட்ட ஆய்வில் உள்ளதால், அது முடிந்த பிறகு பாடத்திட்டம் இறுதி செய்யப்படும். ஆனால் அதற்கு முன்னதாகவே, புதிய பாடத்திட்டத்தை மாணவர்களுக்கு எவ்வாறு பயிற்றுவிப்பது என்பது குறித்த பயிற்சியை சுமார் 40 ஆயிரம் மருத்துவ ஆசிரியர்களுக்கு அந்த அமைப்பு வழங்கியுள்ளது. புதிய பாடத்திட்டம் நடைமுறைக்கு வந்துள்ளதையடுத்து, பழைய பாடத்திட்டம் சட்டவிரோதமான ஒன்று என்றும் அதனை பின்பற்றுவது இனி ஆபத்தானது என்றும் மெடிக்கல் கவுன்சில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version