தமிழகத்தின் புதிய காவல்துறை இயக்குனராக திரிபாதி பதவியேற்றுக் கொண்டார்.
தமிழக சட்டம் ஒழுங்கு காவல்துறை இயக்குனராக பதவி வகித்து வந்த டி.கே. ராஜேந்திரனின் பதவிக்காலம் இன்றுடன் முடிவடைந்ததையொட்டி, புதிய டி.ஜி.பி யாக திரிபாதி பதவியேற்றுக்கொண்டார். மயிலாப்பூரில் உள்ள காவல்துறை இயக்குனர் அலுவலகத்தில் பதவியேற்ற திரிபாதிக்கு, ஓய்வு பெறும் டி.ஜி.பி டி.கே. ராஜேந்திரன் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். இதை தொடர்ந்து, அவர் டி.கே ராஜேந்திரனிடம் இருந்து பொறுப்புகளை ஏற்றுக்கொண்டார். பின்னர், தமிழக காவல் துறையின் 29ஆவது இயக்குனராக பதவியேற்றுக் கொண்ட திரிபாதிக்கு காவல்துறை உயர் அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர். இந்த நிகழ்ச்சியின் போது, சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி ஜெயந்த் முரளி உள்ளிட்ட காவல்துறை உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.