ஜப்பானில் புதிய புல்லட் ரயில் மணிக்கு 360 கிலோ மீட்டர் வேகத்தை எட்டி புதிய சாதனை படைத்துள்ளது
ஜப்பான் தலைநகர் டோக்கியோ மற்றும் ஒசாகா நகரங்களுக்கு இடையேயான புல்லட் ரயில் வரும் ஜூலை மாதம் இயக்க அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது. என் 700 சுப்ரிம் என பெயரிடப்பட்டுள்ள இந்த ரயிலில் குறைவான எடையில், குறைந்த எரிசக்தியை பயன்படுத்தும் வகையிலும், நில நடுக்கம் போன்ற சூழ்நிலையை தாங்கும் கூடுதல் பாதுக்காப்பு வசதிகளோடு வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ரயிலின் சோதனை ஓட்டம் மைபாரா மற்றும் கியோட்டா நகரங்களில் அண்மையில் இயக்கப்பட்டது. அப்போது இந்த புல்லட் ரயில் மணிக்கு 360 கிலோ மீட்டர் வேகத்தை எட்டி புதிய சாதனை படைத்தது.