நீட் தேர்விற்கு இன்று முதல் ஆன்லைன் மூலம் பயிற்சி அளிக்கப்படுகிறது!

நீட் தேர்விற்கு இன்று முதல் ஆன்லைன் மூலம் பயிற்சி அளிக்கப்படுவதாக, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் நகராட்சியில், துய்மை பணியாளர்கள், நகராட்சி அலுவலர்கள் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்களுக்கு, பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், சத்து மாத்திரைகளை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், பள்ளிக்கல்வித் துறையை பொறுத்த வரையிலும் 80 சதவிகித பாடப்புத்தகங்கள் மற்றும் நோட்டுப் புத்தகங்கள் தயாரிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். 11ஆம் வகுப்பு பொதுத் தேர்வில், நடத்தப்படாமல் இருக்கும் ஒரு தேர்வுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என கூறினார். மேலும், நீட் தேர்வுக்கு இன்று முதல், நியூபாக்ஸ் என்ற நிறுவனத்தின் மூலம் இலவசமாக ஆன்லைனில் பயிற்சி அளிக்கப்படுகிறது எனவும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

Exit mobile version