200 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஊசி கோபுர தேவாலயம்: மத நல்லிணக்கத்திற்கு அடையாளம்

பாளையங்கோட்டையில் சமயம், இனம் ,மொழி கடந்து அனைத்து தரப்பினரும் வந்து வழிபடும் தலமாக ஊசி கோபுரம் தேவாலயம் பிரசித்தி பெற்று விளங்கி வருகிறது.

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் அமைந்துள்ள பிரசித்திபெற்ற ஊசி கோபுரம் தேவாலயம் புதுப்பொலிவுடன் காட்சி தருகிறது. சுமார் 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த தேவாலயத்தில் கிறிஸ்துவர்கள் மட்டுமல்லாது இந்துக்கள், முஸ்லீம்கள் என மத நல்லிணக்கத்தோடு அனைத்து சமுதாயத்தினரும் வந்து வழிபட்டு செல்லும் தளமாக விளங்கி வருகிறது. சிறிய அளவில் இருந்த இக்கோயிலை பல்வேறு மதத்தினரும் ஒன்றிணைந்து தேவாலயத்தை விரிவுபடுத்த நிதியுதவி அளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version