நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த கனமழையால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது..
கேரளாவில் பருவமழை தொடங்கியதால், நீலகிரி மலைப்பகுதிகளிலும் நல்ல மழைப்பொழிவு உள்ளது. முன்னேற்பாடாக ஆட்சியர் இன்னசெண்ட் திவ்யா உத்தரவின்படி, சாலையோர மரங்களின் கிளைகள் வெட்டப்பட்டு சரி செய்யப்பட்டன. இதனால், போக்குவரத்து பாதிப்பு பெருமளவில் தவிர்க்கப்பட்டுள்ளது. தொடர் மழையால் குளிரின் தாக்கம் அதிகரித்து இருப்பதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மழை காரணமாக சுற்றுலா பயணிகளின் வரத்தும் குறைந்துள்ளது. எந்த நேரமும் நெரிசலுடன் காணப்படும் சாலைகள் வெறிச்சோடி உள்ளன.