தமிழக அரசின் மானியத் தொகையில் மதுரையில் இளைஞர் ஒருவர் ஆரம்பித்த இயற்கை முறை கோழிப்பண்ணை பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
உசிலம்பட்டி அருகே உள்ள போத்தம்பட்டி கிராமத்தில் கல்லூரி படிப்பை முடித்த மனோஜ் என்பவர் இயற்கை முறையில் கோழிப்பண்னை வைப்பதில் ஆர்வம் கொண்டுள்ளார். இதனையடுத்து தமிழக அரசு சார்பில் 40 ஆயிரம் ரூபாய் மானியம் பெற்ற மனோஜ் கோழிப்பண்ணை துவங்கியுள்ளார்.
சிறிய அளவில் ஆரம்பிக்கப்பட்ட கோழிப்பண்ணை தற்போது சுமார் 800 கோழிகள் வரை வளர்க்கப்பட்டு பெரிய அளவில் வளர்ச்சி அடைந்துள்ளது. கோழிகளுக்கு இயற்கை முறையிலான உணவுகள் மட்டும் வழங்குவதாகவும் அவர் கூறியுள்ளார். தற்போது இந்த வகையான கோழிப்பண்ணையில் உள்ள கோழிகளை பொதுமக்கள் விரும்பி வாங்கி செல்வதாக மனோஜ் தெரிவித்துள்ளார். இதன் மூலம் மாதம் 30ஆயிரம் ரூபாய் வருமானம் ஈட்டுவதாகவும் அவர் கூறியுள்ளார்.