நாடு தழுவிய வேலைநிறுத்தம் : புதுச்சேரியில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

மத்திய அரசைக் கண்டித்து புதுச்சேரியில் நடைபெற்று வரும் வேலைநிறுத்தப் போராட்டம் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், தொழிற்சங்க உரிமையை பறிக்கக் கூடாது
என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய அளவில் தொழிற்சங்கங்கள் இன்று நாடு முழுவதும் வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது.

புதுச்சேரியில் உள்ள பல்வேறு தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தத்தில் பங்கேற்றுள்ளன. இதன்காரணமாக தனியார், அரசு பேருந்துகள் இயங்கவில்லை. ஆட்டோ, டெம்போக்கள் இயங்கவில்லை. பெரும்பாலான தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி முழுவதும் முக்கிய இடங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Exit mobile version