நாடு தழுவிய போராட்டம் வடமாநிலங்களில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

மத்திய அரசின் புதிய பொருளாதார கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டத்தால் வடமாநிலங்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

புதிய ஓய்வூதிய திட்டத்தை திரும்ப பெற வேண்டும், மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு விற்பனைகளை கைவிட வேண்டும் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, மத்திய அரசு ஊழியர்கள் இன்றும் நாளையும், நாடு தழுவிய வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர். இந்த போராட்டம் காரணமாக வடமாநிலங்களில் பேருந்துகள் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.

பல்வேறு இடங்களில் ரயில்மறியல் மற்றும் சாலை மறியல் போராட்டங்களில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர். வேலைநிறுத்த போராட்டம் காரணமாக 40 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான காசோலை பரிவர்த்தனை பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. நாடு முழுவதும், மத்திய அரசு ஊழியர்கள் 15 லட்சம் பேர் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Exit mobile version