இன்றைய நாடாளுமன்ற நிகழ்வுகளில், ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி போடும் இரட்டை வேடமும், முந்தைய காங்கிரஸ் ஆட்சி காலத்தின் தவறான கொள்கைகளும் தோலுறிக்கப்பட்டுள்ளன.
நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்தவும், இந்திய இறையாண்மையை காக்கவும் ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்வதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா மாநிலங்களவையில் அறிவித்தார். இந்த அறிவிப்பு வெளியானதில் இருந்து காங்கிரஸ், திமுக, திரிணமுல் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். ஒரு பக்கம் எதிர்கட்சி எம்.பிக்கள் அமளியில் ஈடுபட்டபோது மறுபக்கம் பாரதிய ஜனதா அரசு மேற்கொள்ளும் நடவடிக்கையில் உள்ள நியாயங்கள், உறுப்பினர்கள் மத்தியில் பேசப்பட்டதால், எதிர்கட்சிகளின் கூடாரம் இரண்டாக பிரிந்தது. இதற்கு சான்றாக மாநிலங்களவை காங்கிரஸ் தலைமை கொறடா புவனேஸ்வர் கலிட்டாவின் திடீர் ராஜினாமா அமைந்துள்ளது. ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்வதற்கு காங்கிரஸ் தலைமை எதிர்ப்புக்காட்ட சொன்னதை ஏற்காமல், தன் சொந்த கட்சியின் கொள்கையில் உள்ள தவறை ராஜினாமாவின் மூலம் தோலுறுத்தி காட்டினார் புவனேஸ்வர் கலிட்டா.
இது மட்டுமல்ல திமுக காங்கிரஸ் கூட்டணியில் மாநிலங்களவை உறுப்பினராக தேர்வான மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, ஜம்மு காஷ்மீர் பிரச்சனையின் ஆணி வேர் காங்கிரஸின் தவறான கொள்கை முடிவுகள்தான் என்பதை ஆவேசமாக குறிப்பிட்டார்.
கடந்த இரண்டு மக்களவை தேர்தல்களிலும் எதிர்கட்சி அந்தஸ்தை கூட பெற முடியாத அளவிற்கு மக்கள் ஆதரவை இழந்து நிற்கும் காங்கிரஸ் அரசின் நியாயமான நடவடிக்கைகளை தொடர்ந்து எதிர்பதன் மூலம் சொந்த கட்சி மற்றும் கூட்டணி கட்சி உறுப்பினர்களின் ஆதரவையும் இழப்பது, அரசியல் ஆனாதையாகிறதா? காங்கிரஸ் கட்சி என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. மேலும் காங்கிரஸ் கூட்டணியில் உள்ள திமுக தலைவர்கள் சிலர் காங்கிரஸுக்கு எதிரான கருத்துகளை கூறி வரும் நிலையில் திமுகவின் தூண்டுதலின் பேரில்தான் வைகோ இப்படி பேசினாரா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.