நாமக்கல் அருகே உடல் கருகிய நிலையில் இளைஞரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. மாற்று சமூகப் பெண்ணைத் திருமணம் செய்ததால் கொல்லப்பட்டாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
நாமக்கல் அடுத்த பொட்டிரெட்டிப்பட்டி ஏரிப் பகுதியில் ஒரு இளைஞரின் சடலம் கருகி அழுகிய நிலையில் கிடப்பதாக அப்பகுதி பொதுமக்கள் எருமப்பட்டி காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சடலத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். உயிரிழந்த இளைஞர் எருமப்பட்டி அருகே உள்ள பொன்னேரி பகுதியில் வசித்து வரும் பெரியண்ணன், பரமேஸ்வரி ஆகியோரது மகன் குமரேசன் என தெரியவந்தது. தனியார் வங்கியின் நிதி நிறுவன பிரிவில் பணியாற்றி வந்த குமரேசன், மாற்றும் சமூகத்தைச் சேர்ந்த பெண்ணை கடந்த வாரம் திருமணம் செய்து வீட்டுக்கு அழைத்து வந்துள்ளார். மாற்று சமூகப் பெண்ணை குமரேசன் திருமணம் செய்த நிலையில் அவர் கொலை செய்யப்பட்டிருப்பது குறித்து எருமப்பட்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்.