ஏலகிரி மலையில் மர்ம நபர்கள் தீ வைப்பு

ஏலகிரி மலையில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீயால் அரிய வகை மூலிகை செடிகள் எரிந்து நாசமாகினவிழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஏலகிரி மலை மிக முக்கிய சுற்றுலா தலமாக திகழ்ந்து வருகிறது.

இந்த ஏலகிரி மலையில் பல்வேறு வகையான மூலிகை செடிகள் மற்றும் மரங்கள் வளர்க்கப்பட்டு வருகின்றன. விடுமுறை தினமான நேற்று சுற்றுலா பயணிகள் அதிகளவில் இங்கு குவிந்தனர். இந்த நிலையில் சமூக விரோதிகள் சிலர் 9வது கொண்டை ஊசி வளைவில் உள்ள மரங்களுக்கு தீ வைத்துள்ளனர். தீ மளமளவென எரிந்து சுமார் ஐந்து கிலோமீட்டர் வரை பரவியுள்ளது. இதனால்,ஏராளமான மரங்கள் உள்ளிட்ட பல்வேறு மூலிகைகள் எரிந்து நாசமாகின.மாலை நேரத்தில் பிடித்த தீயானது இரவு வரை தொடர்ந்தது. காட்டுக்கு தீ வைக்கும் சமூக விரோதிகளை கண்டுபிடித்து சட்ட பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

Exit mobile version