விழுப்புரத்தில் பெட்ரோல் பங்க் மேலாளரை கொலை செய்த மர்மநபர்கள்

விழுப்புரத்தில் பெட்ரோல் பங்க் மேலாளரை கொலை செய்த மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

விழுப்புரம் மாவட்டம் நேமூர் கிராமத்தை சேர்ந்த பிரகாஷ் என்பவர் பெட்ரோல் பங்க் நடத்தி வருகிறார். இந்த பங்கிற்கு பெட்ரோல் போட வந்த மர்ம நபர்களுக்கும், பங்க் ஊழியர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

வாக்குவாதம் முற்றிப் போக ஆந்திரமடைந்த அந்த நபர்கள், நாட்டு வெடிகுண்டை வீசியதுடன், பங்க் மேலாளரை கத்தியால் கொடூரமாக வெட்டினர். தகவலறிந்து வந்த விழுப்புரம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். முன்விரோதம் காரணமாக இந்த சம்பவம் நடந்தது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

Exit mobile version