முத்தலாக் தடை மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதலை அளித்துள்ளார். இதையடுத்து முத்தலாக் தடை சட்டம் நாடு முழுவதும் அமலுக்கு வந்துள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு முத்தலாக் தடை மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து, மாநிலங்களவையில் நேற்று முன்தினம் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது. இதனை தொடர்ந்து குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக மத்திய அரசு அனுப்பி வைத்தது. இந்நிலையில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் முத்தலாக் தடை மசோதாவிற்கு ஒப்புதல் அளித்துள்ளார். இதையடுத்து, மத்திய அரசிதழிலும் வெளியிடப்பட்டது. அதன்படி, முத்தலாக் தடை சட்டம் நாடு முழுவதும் அதிகாரப்பூர்வமாக அமலுக்கு வந்துள்ளது.