இலவம் பஞ்சு சாகுபடியில் அதிக லாபம் கிடைப்பதால் கடலூர் மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
கடலூர் மாவட்டத்தில் கீழூர், பாச்சாரபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் இலவம் பஞ்சு சாகுபடி நடைபெற்று வருகிறது. ஏப்ரம், மே மாதங்களில் அறுவடைக்கு தயாராகும் இந்த மரத்தில் இருந்து சுமார் 2 ஆயிரம் காய்கள் வரை கிடைக்கின்றன. நெற்றுகளை நீக்கி விற்பனை செய்யப்படும் இந்த பஞ்சுகளிலிருந்து நல்ல லாபம் கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மெத்தை,தலையணை, மற்றும் பாதுகாப்பு படை வீரர்களுக்கான ஆடைகள் உள்ளிட்ட பொருட்கள் தயாரிக்க இலவம் பஞ்சு பயன்படுத்தப்படுகிறது.