வெகுவிமர்சையாக நடைபெற்ற ஆடிகிருத்திகை தெப்பத்திருவிழா

திருத்தணி முருகன் கோவிலில் ஆடிகிருத்திகையை முன்னிட்டு தெப்பத் திருவிழா வெகுவிமர்சையாக நடைபெற்றது.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயிலின் தெப்ப திருவிழாவில் வள்ளி, தெய்வானையுடன் முருகப்பெருமான் உற்சவர் தேர் வீதி உலா நடைபெற்றுது. தொடர்ந்து சரவணப்பொய்கையில் உள்ள அலங்கரிக்கப்பட்டிருந்த தெப்பத்தில் எழுந்தருளி, முருகப்பெருமான் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். தெப்பத்தின் நான்கு பக்கப் படிகளிலும் பக்தர்கள் அமர்ந்து, அரோகரா என்ற கோஷம் எழுப்பியபடி சுவாமி தரிசனம் செய்தனர். இந்நிகழ்வில் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்துக்கொண்டனர். விழா ஏற்பாடுகளை கோயில் தக்கார் ஜெய்சங்கர், இணை ஆணையர் ஞானசேகர், உதவி கண்காணிப்பாளர் சேகர் ஆகியோர் சிறப்பாக செய்திருந்ததாக பொதுமக்கள் பாராட்டுக்களை தெரிவித்தனர்.

Exit mobile version