ஆம்பூரில் மதநல்லிணக்கத்தை உருவாக்கும் மசூதி

ஆம்பூரில் ரம்ஜான் பண்டிகையையொட்டி மதநல்லிணக்கத்தை உருவாக்கும் வகையில் 6.5 கிராம் தங்கம் மற்றும் 35 கிராம் வெள்ளியில் மசூதி செய்து நகைத் தொழிலாளி சாதனை படைத்தார்.

வேலூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த சான்றோர்குப்பம் பகுதியை சேர்ந்தவர் தேவன், இவர் ஷராப் பாஜாரில் கடந்த 35 ஆண்டுகளாக நகைத்தொழில் செய்து வருகிறார். பரம்பரை நகைத் தொழிலாளியான தேவன், கின்னஸ் சாதனை புரிவதற்காக குறைந்த மில்லி கிராம் தங்கத்தில் நுண்ணிய அளவில், பல்வேறு மாதிரி பொருட்களை திறம்பட உருவாக்கி வருகிறார். ஏற்கனவே, சிறிய அளவில் இந்திய வரை படத்தை ’உருவாக்கியிருந்தார். தமிழக அரசின் பசுமை வீடு, கிறிஸ்துவின் பிறப்பையும் தத்ரூபமாக காட்டும் வகையில் கிறிஸ்துமஸ் குடில் உள்ளிட்ட பலவற்றை அவர் உருவாக்கியுள்ளார். இந்நிலையில், இஸ்லாமியர்களின் ரமலான் பண்டிகையையொட்டி 6.5 கிராம் தங்கம், 35 கிராம் வெள்ளியால் ஆன மசூதியை தத்ரூபமாக உருவாக்கியுள்ளார். இதையடுத்து அப்பகுதி மக்கள் நகைத்தொழிலாளி தேவனை பாராட்டி வருகின்றனர்.

Exit mobile version