முடிவடைந்தது ஐப்பசி மாத பூஜை !

ஐப்பசி மாத பூஜைகள் முடிவடைந்ததை தொடர்ந்து சபரிமலை ஐயப்பன் கோவிலின் நடை மூடப்பட்டுள்ளது.

ஐப்பசி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை கடந்த 17ஆம் தேதி திறக்கப்பட்டது உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி, சன்னிதானத்திற்குள் நுழைய இளம் பெண்கள் முயன்றதால் பரபரப்பு நிலவியது.

இந்த நிலையில் நெய் அபிஷேகம், களபாபிஷேகம், சகஸ்ர பூஜை உள்ளிட்ட மாதாந்திர பூஜைகள் நிறைவடைந்ததை தொடர்ந்து நேற்றுடன் சபரிமலை நடை மூடப்பட்டது. அடுத்த மாதம் மண்டல, பூஜைக்காக கோவில் நடை மீண்டும் திறக்கப்படும்.

இதனிடையே சபரிமலை விவகாரத்தில் 15-க்கும் மேற்பட்ட மறு சீராய்வு மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. நீதிமன்றம் கேட்கும் பட்சத்தில் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய தயாராக இருப்பதாக தேவசம்போர்டு தெரிவித்துள்ளது.

Exit mobile version