பருவமழை பொய்த்துப் போனதால் 100 நாள் வேலையை 150 நாட்களாக உயர்த்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூரை அடுத்த கல்பூண்டி ஊராட்சியில் உள்ள தள்ளாம்பாடி ஏரியில் 100 நாள் வேலை திட்டத்தின் மூலம், நீர் தேக்க குளம் வெட்டும் பணி நடைபெற்று வருகிறது. மழை இல்லாததால் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், இப்பகுதி மக்கள் வெளி மாவட்டங்களுக்கு வேலைக்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே கூடுதலாக 50 நாட்கள் வேலை வழங்க வேண்டும் என பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.