கிருஷ்ணகிரியில் வியாபாரியை பெட்ரோல் ஊற்றி எரித்த வழக்கில் சந்தேகப்படும் குற்றவாளிகளின் புகைப்படத்தை போலீசார் வெளியிட்டுள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த காதர் பாஷா, கிருஷ்ணகிரி லண்டன் பேட்டை பகுதியில் போர்வை வியாபாரம் செய்து வருகிறார். நேற்று வியாபாரத்தின் போது, போர்வை வாங்க வந்த 4 பேருக்கும், காதர் பாஷாவுக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. அப்போது காதர் பாஷா மீது பெட்ரோல் ஊற்றி கொளுத்திவிட்டு நால்வரும் தப்பியுள்ளனர்.
இதில் தீக்காயமடைந்த காதர் பாஷாவுக்கு, தருமபுரி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த சம்பவத்தில் சந்தேகிக்கப்படும் இளைஞர் மற்றும் 2 பெண்களின் புகைப்படங்களை வெளியிட்டுள்ள போலீசார், அவர்களை பற்றி தகவல் அளித்தால் தக்க சன்மானம் அளிக்கப்படும் என அறிவித்துள்ளனர்.