நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் தேயிலையில் கலப்படம் செய்வதற்காக கொண்டு வரப்பட்ட 7 டன் கலப்பட தேயிலைத் தூளை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதை முன்னிட்டு நீலகிரி மாவட்டம் முழுவதும் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் மேட்டுப்பாளையத்தில் இருந்து கோத்தகிரி நோக்கி சென்று கொண்டிருந்த லாரியை நிறுத்தி சோதனை செய்ததில் அதில் 7 டன் கலப்பட தூள் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து லாரியை பறிமுதல் செய்த அதிகாரிகள் தேயிலை வாரிய அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.