ஆற்றில் கலக்கப்படும் கழிவுகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதி மன்ற கிளை உத்தரவு

பாளையங்கோட்டை ராமையன்பட்டியைச் சேர்ந்த காட்டுராஜா என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், பல்வேறு இடங்களில் சேகரிக்கப்படும் குப்பைகள் ராமலிங்கனேரியில் கொட்டப்படுவதால், கழிவுகள் அனைத்தும் அருவன்குளம் கால்வாய் வழியாக தாமிரபரணி ஆற்றில் கலப்பதாகவும், இதனால் தாமிரபரணி மக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்துவதாக குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, தாமிரபரணி நதியில் கலக்கப்படும் கழிவுகள் குறித்து, அறிக்கை தாக்கல் செய்ய மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டுள்ளது.

Exit mobile version