ஏழை மக்களுக்கு விலையில்லா ஆடுகளை வழங்கிய அமைச்சர்

விவசாயிகளுக்கு குறைந்த விலையில் கால்நடைகள் வழங்கும் திட்டம் விரைவில் தொடங்கப்படும் என கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த ஜமீன் கோட்டாம்பட்டி பகுதியில் ஏழை எளிய மக்களுக்கு விலையில்லா ஆடுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், 585 பயனாளிகளுக்கு விலையில்லா ஆடுகளை வழங்கினார். தொடர்ந்து, நஞ்சே கவுண்டன் புதூரில் 18 லட்ச ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட சமுதாய நலக்கூடத்தை அவர் திறந்து வைத்தார்.

Exit mobile version