தேனி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள சரணாலயங்களில், வன உயிரினங்களுக்கு தேவையான தாதுப் பொருட்கள் வைக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டனர்.தேனி மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலை வன உயிரின சரணாலயத்திற்கு உட்பட்ட தேவதானப்பட்டி, பெரியகுளம், சோத்துப்பாறை மஞ்சளாறு, முருகமலை, கும்பக்கரை, உள்ளிட்ட வனப்பகுதிகளில் வாழும் வன உயிரினங்கள் தாவர வகைகளையே உண்பதால் தாதுப் பொருள்கள் தேவையான அளவு கிடைப்பதில்லை.
எனவே தேவையான அளவு தாதுப்பொருட்கள் கிடைக்கும் வகையிலும் மற்றும் வன உயிரினங்களுக்கு செரிமானம் ஏற்படுத்தும் வகையில் வனப்பகுதியில் தாது உப்பு கட்டிகள் வைக்கும் பணியில் வனத்துறை ஊழியர்கள் மற்றும் அலுவலர்கள் ஈடுபட்டனர்.வன உயிரினங்களுக்கு தாது உப்பு கட்டிகள் வைக்கும் பணி வருடத்தில் பெரும்பாலான தினங்களில் நடைபெறும். இதனால் வன விலங்குகள் அதிக நடமாட்டம் உள்ள பகுதிகளில் இது போன்ற தாது உப்பு கட்டிகள் வைக்கப்பட்டுள்ளன.